தொழுநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தொழுநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-02-06 19:07 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தொழு நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கை, கால் மதமதப்பு தொழு நோயாக இருக்கலாம், தொழு நோய் தோல் மற்றும் நரம்பை பாதிக்கும், தொழு நோயை எந்த நிலையிலும் குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்திச்சென்றனர். இந்த ஊர்வலம் ஜெயங்கொண்டம் சாலையில் முக்கிய வீதிகளின் வழியாக அரியலூர் பஸ் நிலையம் வந்தடைந்தது. இந்த நோய் குறித்து அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு மருத்துவமனைகளையோ அணுகி, எளிதில் குணப்படுத்தி விடலாம். அதனைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்றும் தொழுநோய் துணை இயக்குனர் சுதாகரன் தெரிவித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் விழிப்புணர்வு பதாதகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்