பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.12 ஆயிரத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார்

காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.

Update: 2023-08-04 18:45 GMT

காரைக்குடி, ஆக.5-

காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி பகுதிக்கான ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. மாவட்ட பதிவாளர் அலுவலகமும் அங்கே செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்திலேயே அதிக அளவு பத்திரப் பதிவு இங்கு நடைபெறுகிறது. நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு என்பதால் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெற்றன.

அன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று திடீரென அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.

ஆவணங்கள்

அப்போது அங்கு பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள், பத்திர எழுத்தர்கள், அலுவலர்கள், அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையும், விசாரணையும் இரவு 11.10 மணி வரை நீடித்தது. முடிவில் கணக்கில் வராத ரூ.12 ஆயிரத்தை கைப்பற்றினர். இதற்கிடையே அலுவலகத்தின் ஜன்னலுக்கு வெளியே ரூ.3 ஆயிரத்து 800 கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதனையும் கைப்பற்றினர். இதையடுத்து அந்த பணம் மற்றும் 9 ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்