பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் சாவு
பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரராஜவுக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்சேவல் கிராமத்தில் உள்ளது. இங்கு கடந்த 3-ந் தேதி ஏற்பட்ட விபத்தில் கணேசன், ராஜா, முத்தம்மாள், ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கணேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சையில் இருந்த ராஜா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. ராஜாவிற்கு பொன்னுலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.