தேசூர் காசி விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
தேசூர் காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
சேத்துப்பட்டு
தேசூர் காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
தேசூர் பேரூராட்சியில் உள்ள காசி விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது. இதனையொட்டி காலையில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, வள்ளி தெய்வானை சமேத முருகன், விநாயகர், நாயன்மார்கள், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பின்னர் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் அம்பாளுக்கும் அபிஷேகம் ஆராதனை நடத்தி அலங்காரம் செய்து வைத்தனர். ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு கோவில் மாட வீதியில் மேளதாளம் முழங்க சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் தேசூர், பானம்பட்டு, திரைக்கோவில், குண்ணகம் பூண்டி, சியமங்களம், சாத்த பூண்டி, வந்தவாசி உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை பேரூராட்சி கவுன்சிலர் பூக்கடை வடிவேல், கோகிலா, முன்னாள் கவுன்சிலர் வெற்றிவேல் சரளா, தீபா, பழனி, சுமதி ரமேஷ் ஆகியோர் அன்னதானம் வழங்கினார்கள்.