அங்கன்வாடி பணியாளர் முன்னேற்ற சங்க மாநாடு

சின்னசேலத்தில் அங்கன்வாடி பணியாளர் முன்னேற்ற சங்க மாநாடு நடைபெற்றது.

Update: 2022-05-22 19:54 GMT

சின்னசேலம், 

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதல் மாநாடு சின்னசேலத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காந்திமதி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் பத்மம்மா, பொதுச்செயலாளர் நளினி, மாநில அமைப்பு செயலாளர் விஜயா, மாநில பொருளாளர் கோமலாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட துணைத்தலைவர் சுமித்ரா தேவி தீர்மானங்களை வாசித்தார். தொ.மு.ச.பேரவை பொருளாளர் நடராசன், பேரவை அமைப்பு செயலாளர் வேலுமணி, துணை செயலாளர் ஜெம்மாடிசில்வா, மாவட்ட தலைவர் திராவிடமணி, மாவட்டசெயலாளர் பழனிமுத்து, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநாட்டை ஆதரித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், தொ.மு.ச.நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்