மதுபாட்டில் விற்ற முதியவர் கைது
தியாகதுருகம் அருகே மதுபாட்டில் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே நாகலூர் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நாகலூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்த செல்லமுத்து (வயது 60) என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்லமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.