கேரள வேர் வாடல் நோயின் தீவிரத்தை மதிப்பிட பயிற்சி

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கேரள வேர் வாடல் நோயின் தீவிரத்தை மதிப்பிட பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-10 21:30 GMT

ஆனைமலை

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் களப்பணியாளர்களுக்கு தென்னையில் கேரள வேர் வாடல் நோயின் அறிகுறிகளை கண்டறிந்து, அதன் தீவிரத்தை மதிப்பீடு செய்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு கோவை வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். துணை இயக்குனர் வெங்கடாசலம், புனிதா, விஜயகல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் லதா பேசும்போது, புதிய தொழில்நுட்ப முறையில் கேரள வேர் வாடல் நோயின் ஆரம்ப நிலையை கண்டறியும் முறைகள், சமச்சீர் உர மேலாண்மை, முறையான பாசன நீர் மேலாண்மை, வேர் உயிர் பெருக்கம், உயிரி பயன்பாடு பற்றி விளக்கம் அளித்தார். மேலும் தென்னையில் கேரள வேர் வாடல் நோய் குறித்த கணக்கெடுப்பு பணியில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட 130 அலுவலர்கள் பங்கேற்று உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்