அமரநந்தீஸ்வர் அபீதகுஜாம்பாள் கோவில் குடமுழுக்கு
அமரநந்தீஸ்வர் அபீதகுஜாம்பாள் கோவில் குடமுழுக்கு
நாகையில் மரநந்தீஸ்வர் அபீதகுஜாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி விக்னேஸ்வர பூஜை நடந்தது. 7-ந் தேதி காலை முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கடங்கள் புறப்பட்டு கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு உட்பட்ட கூத்தழகு அய்யனார் மற்றும் குளுந்தாளவீரன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 8-ந்தேதி அனுக்ஞை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியும், 9-ந்தேதி கோ பூஜை, கணபதி ஹோமம், யாகசாலையும் நடைபெற்றது. நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு விமான குடமுழுக்கும், காலை 9.45 மணிக்கு கூத்தழகு அய்யனார், குளுந்தாளவீரன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழாவில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.