சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.

Update: 2023-04-15 19:12 GMT

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. அதேபோல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்