சங்கராபுரத்தில்விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை

சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-14 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் சங்கராபுரம் வாசவி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவகுமார், ரேவதி இளம்பரிதி, அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்கள் சிகாமணி, பிரகாசம், வள்ளலார் மன்ற தணிக்கையாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாலமுருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட தேவையான முன்னேற்பாடு பணிகளை செய்வது, சங்கராபுரத்தில் வழக்கமாக வைக்கப்படும் கோவில்களில் 18.9.2023 அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு 24.9.2023 அன்று ஊர்வலமாக எடுத்து சென்று சங்கராபுரம் ஏரியில் கரைப்பது, விழாவிற்க்கு உரிய அனுமதி பெறுவது, விழா சம்பந்தமாக அரசு அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அன்பழகன், ஏழுமலை, முத்துசாமி, பழமலை சடையாண்டி, சக்திவேல், பழனி, கணேசன், ஜெயராஜ், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்