துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2022-06-27 04:45 GMT


Live Updates
2022-06-27 06:32 GMT

சென்னை, ராயப்பேட்டையில் ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நிறைவு

2022-06-27 06:30 GMT



2022-06-27 06:21 GMT

அதிமுக ஆலோசனை கூட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். மேலும் 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர்.

அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

2022-06-27 05:55 GMT

“பொதுச்செயலாளர் ஈபிஎஸ்...“ அதிமுக தலைமை அலுவலகத்தில் எழுந்த கோஷம்



2022-06-27 05:26 GMT

அதிமுக தலைமை அலுவலகத்தில் பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு

2022-06-27 05:20 GMT
  • அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறும் நிலையில் வெளியே கோஷம்
  • ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வேண்டும் என தொண்டர்கள் கோஷம்
2022-06-27 05:10 GMT

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் புதிய பொருளாளராக கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022-06-27 04:59 GMT

தேனியில் இருந்து சென்னை விரைகிறார் ஓ.பன்னீர் செல்வம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேனியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு வருகிறார்.

2022-06-27 04:56 GMT
  • அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் 65 தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை
  • இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்
2022-06-27 04:47 GMT
  • அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது.
  • இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றுள்ளார்.
  • இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அதேவேளை, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்ப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்