அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

விழுப்புரத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Update: 2023-05-19 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நாளை மறுநாள்(திங்கட்கிழமை) சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்று கவர்னரை சந்தித்து மனு கொடுப்பது சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, புலியனூர் விஜயன், நடராஜன், பெரும்பாக்கம் ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், விக்கிரவாண்டி நகர செயலாளர் பூர்ண ராவ், நகர மன்ற உறுப்பினர்கள் கோதண்டராமன், கோல்டு சேகர், கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்