ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகம்

கோட்டூரில் ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-08-27 19:30 GMT

பொள்ளாச்சி

கோட்டூரில் ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆதிசங்கரர் கோவில்

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் பிரசித்தி பெற்ற ஆதி அமர நாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 25-ந் தேதி காலை காலை 8 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நவகிரக ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை ஆகியவை நடந்தது. மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், முதற்கால வேள்வி நடந்தது.

யந்திர பிரதிஷ்டை

அதன்பின்னர் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு 2-ம் கால வேள்வி, 10 மணிக்கு கோபுர விமான கலச பிரதிஷ்டை, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தனம் சாற்றுதல் நடந்தது. மாலை 5 மணிக்கு 3-ம் கால வேள்வி நடந்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால வேள்வி, மண்டபார்ச்சனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அன்னதானம்

அதன்பிறகு தச தரிசனம், தசதானம், மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பயபக்தியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்