மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்

Update: 2022-11-25 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள கிழாய்பகுதியில் எந்திரம் மூலம் தாளடி நடவு மேற்கொள்ளப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் நடப்பட்ட தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். எனவே மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்