புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்ட 15 பஸ்கள் மீது நடவடிக்கை

வல்லம் நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்ட 5 அரசு மற்றும் 10 தனியார் பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-07-28 20:27 GMT

தஞ்சாவூர்;

வல்லம் நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக இயக்கப்பட்ட 5 அரசு மற்றும் 10 தனியார் பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கலெக்டர் உத்தரவு

தஞ்சையை அடுத்த வல்லம் நகருக்குள் இரவு நேரங்களில் வராமல் புறநகர் பஸ்கள் புறவழிச்சாலையில் செல்வதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்புக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவர், உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தஞ்சை வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் தஞ்சை புறவழிச் சாலையில் வல்லம் அருகே இரவு நேரங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பஸ்கள் மீது நடவடிக்கை

இந்த ஆய்வின்போது தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் வல்லம் நகருக்குள் செல்லாமல் இரவு நேரங்களில் புறவழிச் சாலை வழியாக சென்றது தெரியவந்தது. அவ்வாறு புறவழிச் சாலையில் இயக்கப்பட்ட 10 தனியார் பஸ்கள் மற்றும் 5 அரசு பஸ்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி புதிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

குறும்படம் வெளியீடு

மேலும் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தஞ்சையை அடுத்த வல்லம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதனை அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவர்கள் ஏராளமான கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்