குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2023-08-25 18:35 GMT

கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் முதல் மற்றும் 2-ம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சரவணக்குமரன், குமரக்கண்ணன் ஆகியோர் கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கடந்த 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 14 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்