பள்ளி மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி

Update: 2023-06-17 18:45 GMT


உலகம் முழுவதும் சர்வதேச யோகாதினம் ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா பள்ளியில் உள்ள கலை அரங்கத்தில் விருதுநகர் யோகா அசோசியேசன் செயலாளர் ரேணு ராம்பால் தலைமையில், விருதுநகரில் உள்ள 5 பள்ளிகளிலிருந்து 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகள் 200 பேர் 1 மணி நேரத்தில் தொடர்ந்து 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தனர். ஆஸ்கார் உலக சாதனை பார்வையாளர் கதிரவன் முன்னிலையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 50 பேர் 1 மணிநேரம் 40 நிமிடத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் யோகா செய்து ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்