தேங்கி கிடக்கும் குப்பைகள்

திருச்சுழி பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

Update: 2023-03-21 20:29 GMT

திருச்சுழி, 

திருச்சுழி பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

அகற்றப்படாத குப்பை

திருச்சுழி நகரின் மையப்பகுதியில் திருச்சுழி முதல் நிலை ஊராட்சி மன்றம் அமைந்துள்ளது. போலீஸ்நிலையம், திருமேனிநாதர்கோவில், பதிவுத்துறை அலுவலகம், பஸ்நிறுத்தம், சப்-கோர்ட்டு, ரமண மகரிஷி பிறந்த இடம், ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலை வழியாக தான் செல்கின்றனர்.

இ்ந்தநிலையில் இங்குள்ள கூட்டுறவு வங்கி மற்றும் ஏ.டி.எம். அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் அப்படிேய தேங்கி கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாய நிலை நிலவுகிறது.

நடவடிக்கை

அதேேபால போலீஸ் நிலையத்தை சுற்றிலும் குப்பைகழிவுகள், வாருகாலில் தேங்கி நிற்கிறது. சாலையில் செல்லும் பொதுமக்களும் பாலித்தீன்பாக்கெட்டுகள், கழிவுபொருட்களை வாருகாலில் வீசி விட்டு செல்கின்றனர். வாருகால் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே திருச்சுழி முதல் நிலை ஊராட்சி முன்பும், போலீஸ் நிலையம் முன்பும் சுற்றியுள்ள வாருகாலை சுத்தப்படுத்தி அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்