ஓசூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி செவிலியர் பலி நண்பர் படுகாயம்

ஓசூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி செவிலியர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-01 17:03 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி செவிலியர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

செவிலியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள அருணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி. இவருடைய மகள் சுமித்ரா (வயது 22). இவர் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஆஷா பிரபு என்ற நண்பருடன் ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆஷா பிரபு மோட்டார்சைக்கிளை ஓட்டினார். சுமித்ரா பின்னால் அமர்ந்திருந்தார்.

விசாரணை

அப்போது ஓசூர் அருகே ஒன்னல்வாடி பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சுமித்ரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ஆஷா பிரபு மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்