லாரி மீது அரசு பஸ் மோதியது; பயணிகள் உயிர் தப்பினர்
லாரி மீது அரசு பஸ் மோதியது; பயணிகள் உயிர் தப்பினர்
மொடக்குறிச்சி
திருப்பூர் மாவட்டம் மூலனூரில் இருந்து மொடக்குறிச்சி வழியாக நேற்று காலை 9 மணி அளவில் ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மண்கரடு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்றுகொண்டு இருந்த லாரியின் பின்பக்கம் அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தார்கள். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.