கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்
புதுக்கோட்டை கணேஷ் கருப்பையா காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.
மதுரை,
தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் ரூ.62 கோடி மதிப்பில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழர்தம் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டி மாலை நிறைவு பெற்றது.
இதில் 10 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் உடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த வீரர்கள் தமிழரசன், பரத்குமாருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த காளையாக புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேஷ் கருப்பையா என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது