பேரையூர் அருகே வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த இளம்பெண்- கணவரை பிடித்து போலீஸ் விசாரணை
பேரையூர் அருகே வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்
இளம்பெண் பிணம்
பேரையூர் அருகே வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி செல்வபிரியா (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவிக்குள் குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை செல்வபிரியா, தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சாப்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கணவரிடம் விசாரணை
செல்வ பிரியா எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் செல்வபிரியா இறந்தது குறித்து அவரது கணவர் சின்னச்சாமியை சாப்டூர் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திலேயே விரல் ரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.