கள்ளக்காதலன் பேச மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் - அனாதைகளான 2 பிள்ளைகள்
கடையநல்லூர் அருகே கள்ளக்காதலன் பேச மறுத்ததால், வார்டு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேபோகநல்லூர் ஊராட்சியின் 3-வது வார்டு உறுப்பினர் பேச்சித்தாய். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தனது இரண்டு குழந்தைகளுடன் சுந்தரேசபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பேச்சித்தாய்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பல்வேறு பிரச்சனை காரணமாக அந்த இளைஞர் பேச்சித்தாயுடன் பேசவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த வார்டு உறுப்பினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு குழந்தைகளின் குறித்து சிந்திக்காமல் கள்ளக்காதலுக்காக வார்டு உறுப்பினர் உயிரைவிட்ட நிகழ்வு, உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.