ராமநாதபுரத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா தொற்று..!
ராமநாதபுரத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு சளி, காய்ச்சல் இருந்த நிலையில், பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குழந்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.