தேங்காய் லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மின்கம்பம் மீது மோதியதில் சேதம்

புகழிமலையில் தேங்காய் லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மின்கம்பம் மீது மோதியதில் சேதமடைந்தது. தொழிலாளர்கள் உயிர் தப்பினார்.

Update: 2023-02-05 18:30 GMT

மின்கம்பம் மீது மோதிய டிராக்டர்

கரூர் மாவட்டம், புகழிமலையில் உள்ள முல்லைநகர் வழியாக ஒரு டிராக்டரில் தேங்காய் லோடுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனால் தேங்காய் கீழே விழாமல் இருப்பதற்காக டிராக்டரின் பின்பகுதியில் இருபுறமும் உயரமாக மூங்கில் தட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதே சாலையில் எதிரே கார் ஒன்று வந்துள்ளது. கார் வருவதைப் பார்த்த டிராக்டர் டிரைவர் திடீரென இடது புற ஓரமாக டிராக்டரை ஒட்டி உள்ளார். அப்போது டிராக்டர் இருந்த மூங்கில் தட்டி திடீரென ஓரத்தில் நடப்பட்டிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் கம்பம் முறிந்து, மின்கம்பி மூங்கில் தட்டி மீது விழுந்தது.

உயிர் தப்பினர்

இதனால் பின்னால் அமர்ந்து இருந்து தொழிலாளர்கள் கத்தி கூச்சல் போட்டனர். இதனால் உடனடியாக டிராக்டரை டிரைவர் நிறுத்தினார். மின்கம்பி தொழிலாளர்கள் மீது விழாமல் அவர்களுக்கு முன்னால் விழுந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் மின்வாரியத்தினர் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் மின்கம்பத்தின் வழியாகச் சென்ற கம்பிகளை அப்புறப்படுத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் அகற்றப்பட்டது.

இந்நிலையில் மின் கம்பம் சேதம் அடைந்து விட்டதால் மாற்று கம்பம் நடுவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பத்தை டிராக்டர் மோதி சேதப்படுத்திய டிராக்டர் டிரைவருக்கு அதற்கான உரிய தொகை வசூலிக்கப்படும் என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்