குரூப்-4 தேர்வுக்கு படிப்பதற்காக நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்த வாலிபர் மர்மசாவு..!

குரூப்-4 தேர்வுக்கு படிப்பதற்காக நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்த வாலிபர் உயிரிழந்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-09-19 02:05 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி வடக்குத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் விவேக் (வயது 30). இவர் தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து படித்து வந்தார். மேலும் விவேக் தனது படிப்புக்கு தடை இல்லாமல் இருப்பதற்காக தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மயிலாடுதுறை டவுன் நிலையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி இருந்து வந்துள்ளார்.

தொடர்ந்து வாடகை வீட்டில் தங்கி இருந்தபடியே நண்பர்களுடன் சேர்ந்து குரூப் -4 தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சென்னைக்கு சென்று குரூப்-4 தேர்வு எழுதிவிட்டு மீண்டும் மயிலாடுதுறை திரும்பி உள்ளார். சம்பவத்தன்று நண்பர்கள் வேலைக்கு வெளியே சென்று விட விவேக் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் நண்பர்கள் வந்து பார்த்த போது வீட்டில் மயங்கிய நிலையில் விவேக் கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் விவேக்கை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விவேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்