விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

Update: 2023-09-12 20:42 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி தாலுகா கழுவனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 36). இவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் இருந்து தனது ஊருக்கு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குழந்தைகளை ஏற்றிக் கொண்டு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தோணுகால் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது நாய் குறுக்கே வந்து மோட்டார் சைக்கிளில் மோதியதில் ராமகிருஷ்ணன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்