மோட்டார் சைக்கிள், காரில் அடுத்தடுத்து மோதியதில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள், காரில் அடுத்தடுத்து மோதியதில் வாலிபர் பலியானார்.

Update: 2023-09-10 23:01 GMT


விருதுநகர் அருகே உள்ள இ. குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 27). இவர் விருதுநகரில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த சக்திபாலன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிள், சக்தி பாலன் மோட்டார் சைக்கிளில் மோதியதில் சக்திபாலன் படுகாயமடைந்தார். ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிள் சக்தி பாலனின் மோட்டார் சைக்கிளில் மோதியதை தொடர்ந்து எதிரே வந்த காரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் பலியானார்.

படுகாயம் அடைந்த சக்தி பாலன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இறந்த ஈஸ்வரனின் உடலும் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காரை ஓட்டி வந்த சென்னை ஆண்டாள் குப்பத்தை சேர்ந்த கோபி என்பவரிடம் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்