சிறந்த செவிலியர்களுக்கு நினைவு பரிசு
சிறந்த செவிலியர்களுக்கு நினைவு பரிசு
பனைக்குளம்
ராமநாதபுரத்தில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் முகவை தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பாக கொரோனா நோய்த்தொற்று காலங்களில் தன்னலமற்று பங்காற்றிய செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் டாக்டர் இ.எம்.அப்துல்லா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நூருல் ஷமது தலைமை தாங்கினார். ஆண் செவிலியர் ராஜசேகரன் வரவேற்றார். மருத்துவர் கண்ணகி முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியை செவிலியர் கண்காணிப்பாளர்கள் சரளா, இந்திராகாந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.