மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி

வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி

Update: 2023-05-03 18:45 GMT

கம்மாபுரம்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு உபகரணங்களை வழங்கும் விழா வேப்பங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி வேல்முருகன், வட்டார மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் மற்றும் கை, கால் உபகரணங்கள் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. உபகரணங்களின் பயன்கள் மற்றும் கையாளும் முறைகளை இயன்முறை மருத்துவர் அருண்பிரபாகர் பெற்றோர்களுக்கு விளக்கி கூறினார். சிறப்பாசிரியர்கள் கொளஞ்சி, தமிழரசன், செல்வகுமார், பகல் நேர மைய பணியாளர்கள் காயத்ரி, செந்தமிழ் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் இளவரசி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை பெற்றோர்களிடம் எடுத்துரைத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்