அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Update: 2023-01-21 18:45 GMT

திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகில் வன்மீகபுரத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு செல்வராஜ் எம்.பி., பூண்டி.கே. கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் அனைத்து துறைகளின் காட்சி அரங்குகள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ராட்சத பலூனை கலெக்டர் பறக்கவிட்டார். தொடர்ந்து தாட்கோ அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மானிய விலையில் டிராக்டர்களையும், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். நேற்று பரதநாட்டியம், மேஜிக் ஷோ உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, ஒன்றியக்குழு தலைவர் தேவா, நகர்மன்ற உறுப்பினர் புவன பிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்