தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர்ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

Update: 2023-08-10 18:45 GMT

மோகனூர்

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க சர்க்கரை பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார். சி.ஐ.டி.யு. சர்க்கரை பிரிவு மாநில துணைத்தலைவர் வெங்கடாசலம், ஜெ.பேரவை செயலாளர் வெங்கடேசன், தே.மு.தி.க. செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், அலுவலர்களுக்கும், தொழிலாளர்களும் உள்ள ஊதிய முரண்பாடுகளை கலைந்து சமூக நீதி காக்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாய முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் செல்ல.ராசாமணி, பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவரும், ராசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான சுப்பிரமணியன், சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணியாளர் சங்கச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்