நடைபாதைக்குள் புகுந்த லாரி

கூடலூரில் இரும்பு தடுப்புகளை உடைத்து கொண்டு டேங்கர் லாரி நடைபாதைக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

Update: 2023-06-27 20:30 GMT

கூடலூர்

கூடலூரில் இரும்பு தடுப்புகளை உடைத்து கொண்டு டேங்கர் லாரி நடைபாதைக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

டேங்கர் லாரி

ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தொடர்ந்து கூடலூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட இடங்களுக்கும் சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நகரமாக கூடலூர் விளங்குகிறது. இததவிர காலை, மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கானவர்கள் செல்வதால் நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது.

இதேபோல் ஊட்டியில் இருந்து கூடலூர் வரும் வாகனங்கள் அடிக்கடி கட்டுப்பாட்டை இழந்து கூடலூருக்குள் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் சாலையில் நடந்து செல்வதை தவிர்க்க நடைபாதை ஓரம் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து கூடலூருக்கு கழிவு நீரேற்றும் டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது.

நடைபாதைக்குள் புகுந்தது

அப்போது பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து சிக்னல் ெயல்படும் இடத்துக்கு முன்பு திடீரென கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி நடைபாதை ஓரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு வந்தது. மதிய நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. தொடர்ந்து டேங்கர் லாரி நடைபாதைக்குள் புகுந்து ஒரு மளிகை கடை முன்பு நின்றது.

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் சிலர் அலறி அடித்து ஓடினர். மேலும் கடை முன்பு நின்றிருந்த மின் கம்பத்தின் மீது டேங்கர் லாரி அதிர்ஷ்டவசமாக மோத வில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நடைபாதையில் உள்ள இரும்பு தடுப்புகள் சேதம் அடைந்ததால் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்