மதுக்கடை விற்பனையாளரை வழிமறித்து பை பறிப்பு

மோட்டார்சைக்கிளில் சென்ற மதுக்கடை விற்பனையாளரை வழிமறித்து பையை பறித்துச்சென்றனர்

Update: 2022-12-22 21:16 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அதில் நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த மாரி மகன் சுடலை (வயது 48) என்பவர் விற்பனையாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மதுக்கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மூலைக்கரைப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தார். அரசனார்குளம் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் சுடலையை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி அரிவாளை காட்டி மிரட்டி கையில் வைத்திருந்த பையை பிடுங்கி சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர் வைத்திருந்த பையில் பணம் ஏதும் இல்லை. கடை பூட்டு சாவி மட்டும் இருந்தது. இந்த சம்பவம் குறித்து சுடலை மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்