பிறவி குறைபாடுடன் பிறந்த ஆட்டுக்குட்டி
பிறவி குறைபாடுடன் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
வேலூர் ஓட்டேரியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆடு நேற்று முன்தினம் குட்டி போட்டது. அந்த ஆட்டுக்குட்டிக்கு பிறவி குறைபாடுகள் உள்ளது. அதாவது கண்கள் இரண்டும் அருகருகே ஒட்டியவாறும், வாய் இருந்தும் அதை திறக்க முடியாதவகையிலும், நாக்கு வெளியே தொங்கும் நிலையிலும் அந்த ஆட்டுக்குட்டி காணப்பட்டது.
இதனால் அய்யப்பன் அதை வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவந்தார். டாக்டர் ரவிசங்கர் சோதனை செய்தார். அந்த ஆட்டுக்குட்டியால் தாய்ப்பால் குடிக்க முடியவில்லை. பசியை போக்க பாட்டிலில் பால் வழங்கப்பட்டது. டாக்டர் கூறுகையில், 2 வாரங்களுக்கு பின்னர் தான் அந்த ஆட்டுக்குட்டிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சாத்திய கூறுகள் உள்ளதா என்பது தெரியவரும். அதன்பிறகு சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.