ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் பேரின்பம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின் மேரி கலந்து கொண்டு 12-ம் வகுப்பை சேர்ந்த 158 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதி முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ட்ரிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.