தொடர் மழைக்கு நடுவே சாலையை கடந்து சென்ற முதலை... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.;

Update:2023-12-04 09:28 IST

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. சர்வ சாதாரணமாக சாலையை கடந்து மறுபுறம் ஊர்ந்து சென்ற முதலையை கண்ட வாகன ஓட்டிகள், அதிர்ச்சியடைந்தனர்.

முதலை சாலையை கடக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து வனத்துறை செயலாளர்  விளக்கமளித்து கூறுகையில், "சென்னையில் உள்ள பல நீர் ஆதாரங்களில் முதலைகள் ஏற்கனவே உள்ளன. புயல், மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்." என்றார்.  

 

Tags:    

மேலும் செய்திகள்