செல்போனில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தொட்டியம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Update: 2024-08-09 02:34 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த நாச்சாப்புத்தூர் கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (23 வயது). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே செல்போனில் பேசி கொண்டிருந்த போது அருகில் இருந்த மின்கம்பத்தில் சாய்ந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கிய நிலையில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், உறவினர்கள் முத்துக்குமாரை காரில் வைத்து முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாச்சாப்புத்தூர் கருங்காடு பகுதியில் மின்வாரியம் சரியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் அடிக்கடி மின்விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்