குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2023-08-19 18:35 GMT

கிருஷ்ணராயபுரம் குறு வட்ட அளவிலான வளையப்பந்து போட்டி பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், சதுரங்க போட்டி லாலாபேட்டையில் உள்ள தனியார் பள்ளியிலும் நடைபெற்றது. இந்த 2 போட்டிகளிலும் கிருஷ்ணராயபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.இதில் வளைய பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் கார்த்திகா என்ற மாணவி முதல் பரிசையும், 14,17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் அனிதா, யாழினி, தேவிகா ஜனனி, ஜீவன், ஆகாஷ் ஆகியோர் 2-ம் பரிசையும் பெற்றனர். இதேபோல் சதுரங்கப்போட்டியில் பாலமுருகன் என்ற மாணவர் 2-ம் பரிசும் பெற்றார். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ரூசோவையும் பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா பாராட்டி வாழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்