திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ராசாத்தி தலைமை தாங்கினார். கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாநில சதுரங்க கழக துணைத்தலைவர் பாலகுணசேகரன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தென்பரை அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பஞ்சாபிகேசன், பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.