திருவண்ணாமலை: டிராக்டர் மோதியதில் 7 மாத கர்ப்பிணி, 1½ வயது குழந்தை பரிதாப பலி
திருவண்ணாமலை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் கர்பிணி பெண் மற்றும் 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.;
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கமறகே உள்ள தானகவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்த ராஜதுரை (வயது 30). இவர் அவரது ஏழு மாத கர்ப்பிணி மனைவி மணிமேகலை(25) மற்றும் ஒன்றரை வயது குழந்தை துரைமணி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது முத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ராஜதுரை படுகாயம் அடைந்தார். மேலும் ஒன்றரை வயது குழந்தையான துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தது.
ராஜதுரையின் மனைவி மணிமேகலை உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது வழியிலேயே உயரிழந்தார். மேலும் இது குறித்து புதுப்பாளையம் துணை காவல் ஆய்வாளர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.