81,044 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்

விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 237 மையங்களில் 81,044 பேர் எழுத உள்ளனர்.

Update: 2022-07-20 19:05 GMT

விருதுநகர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 237 மையங்களில் 81,044 பேர் எழுத உள்ளனர்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் வருகிற 24-ந் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 237 மையங்களில் 81,044 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். விருதுநகர் தாலுகாவில் 35 மையங்களில் 12,250 பேரும், அருப்புக்கோட்டை தாலுகாவில் 37 மையங்களில் 11,917 பேரும், காரியாபட்டி தாலுகாவில் 10 மையங்களில் 3,839 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

ராஜபாளையம் தாலுகாவில் 46 மையங்களில் 14,633 பேரும், சாத்தூர் தாலுகாவில் 17 மையங்களில் 7,029 பேரும், சிவகாசி தாலுகாவில் 41 மையங்களில் 14,098 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 30 மையங்களில் 9,915 பேரும், திருச்சுழி தாலுகாவில் 14 மையங்களில் 2,090 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

விதிமுறைகள்

வெம்பக்கோட்டை தாலுகாவில் 4 மையங்களில் 1,741 பேரும், வத்திராயிருப்பு தாலுகாவில் 3 மையங்களில் 3,532பேரும் ஆக மொத்தம் 81,044பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு எழுதுபவர்கள் பதிவு எண்கள், அறைகளின் எண் குறித்த விவரங்கள் தேர்வு மையங்களில் வைக்கப்படும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக அறைக்கு வர வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களுக்கு கால்குலேட்டர், செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதி இல்லை. தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் தேர்வு மையங்களுக்குள் செல்போனை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்