77 ஓட்டுனர் உரிமங்கள் ரத்து

போக்குவரத்து விதிகளை மீறிய 77 ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது

Update: 2023-09-15 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீதும், உரிய அனுமதி சீட்டு பெறாமலும், அனுமதி சீட்டு விதிகளை மீறி பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகம்மது தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன், பாத்திமா பர்வீன், பத்மபிரியா ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கடந்த மாதம் மட்டும் 1149 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில், தலைக்கவசம் அணியாதது, சீட் பெல்ட் போடாதது போன்ற விதிகளை மீறிய வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.14 லட்சத்து 18 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையிலான விபத்துகளை உண்டாக்கியதோடு, செல்போன் பேசிக்கொண்டு சென்றது, அதிக வேகத்தில் சென்றது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றது போன்ற விதிமீறலில் ஈடுபட்ட 77 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் கலெக்டர் உத்தரவின்படி வெளியூர் பெர்மிட்களை வைத்து ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளை ஓட்டுபவர்களை தீவிரமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்