குரூப்-1 முதல் நிலை தேர்வு-40 மையங்களில் 6,137 பேர் தேர்வு எழுதினர்

விருதுநகர் மாவட்டத்தில் 40 மையங்களில் 6 ஆயிரத்து 137 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல் நிலை தேர்வு எழுதினர்.

Update: 2022-11-19 18:45 GMT

விருதுநகர் மாவட்டத்தில் 40 மையங்களில் 6 ஆயிரத்து 137 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல் நிலை தேர்வு எழுதினர்.

போட்டித் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல் நிலை போட்டி தேர்வு நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 40 மையங்களில் நடைபெற்றது.

மொத்தம் 10,349 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 4,212 பேர் தேர்வு எழுத வரவில்லை. 6137 பேர்தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 59 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். 41 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை

கண்காணிப்பு

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் உள்பட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடந்த அனைத்து தேர்வு மையங்களிலும் 20 பேருக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். மொத்தம் 40 மையங்களிலும் 500-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல தலா 3 பேர் அடங்கிய 10 நடமாடும் போலீஸ் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்