600 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-27 18:45 GMT

கொல்லங்கோடு:

கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நித்திரவிளை போலீசார் மங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்காடு பாலம் வழியாக முன்சிறையில் இருந்து கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை சோதனையிட்டனர். அப்போது அதில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்எண்ணெய் 17 பிளாஸ்டிக் கேன்களில் 600 லிட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மண்எண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்