ஒரே நாளில் 57 வீடுகள் சேதம்

ஒரே நாளில் 57 வீடுகள் சேதம்

Update: 2022-11-13 20:11 GMT

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக ஒரே நாளில் 57 வீடுகள் சேதமாகி உள்ளது.

தொடர் மழை

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சம்பா இளம் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்று பகலில் மழை பெய்யாததால் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை வடிகால்களை சீரமைத்து வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மழையின் காரணமாக வீடுகளின் சுவர்கள் நனைந்து இருப்பதால் ஆங்காங்கே சில வீடுகள் இடிந்து விழுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 45 குடிசை வீடுகள் பகுதியாகவும், 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. அதே போல் 9 ஓட்டுவீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது.

கணக்கெடுப்பு பணி

அதுமட்டுமின்றி 2 பசுமாடுகள், 1 ஆடு மழையினால் உயிரிழந்துள்ளது. பயிர் பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினரும், கால்நடைகள் உயிரிழப்பு குறித்து கால்நடைத்துறையினரும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி வடக்கு தெருவில் மழைநீர் வடிவதற்கு வழியின்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

அய்யம்பேட்டை-7, பட்டுக்கோட்டை-3, பூதலூர்-2, ஈச்சன்விடுதி-2, பேராவூரணி-2, திருக்காட்டுப்பள்ளி-2, நெய்வாசல்தென்பாதி-2, வெட்டிக்காடு-2, பாபநாசம்-2, ஒரத்தநாடு-1, கல்லணை-1, தஞ்சை-1, குருங்குளம்-1, அதிராம்பட்டினம்-1, மதுக்கூர்-1.

Tags:    

மேலும் செய்திகள்