420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

Update: 2022-12-28 19:31 GMT

கொல்லங்கோடு, 

இனயத்தில் இருந்து சென்னை பதிவெண் கொண்ட சொகுசு காரில் மானிய மண்எண்ணெய் கடத்தி செல்லப்படுவதாக நித்திரவிளை தனிப்பிரிவு ஏட்டு ஜோசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே ஜோஸ் மற்றும் போலீசார் விரிவிளை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்போது டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

பின்னர் போலீசார் காரை சோதனை செய்த போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 பிளாஸ்டிக் கேன்களில் 420 லிட்டர் மானிய மண்எண்ணெய் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காருடன் மண்எண்ணெய் கேன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்