திண்டுக்கல் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-13 21:45 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்புகிறது. இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்