மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுகள் மாயம்

மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுகள் மாயம் ஆனது.

Update: 2023-07-18 20:14 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள போஸ் காலனியை சேர்ந்தவர் டேனியல் ஜோசப் (வயது 22). இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள இந்திராநகர் பொட்டலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். டீ சாப்பிடுவதற்காக அவர் அங்கிருந்து கிளம்பி ஊருக்குள் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மீண்டும் சென்று பார்த்த போது அங்கு மேய்ச்சலில் இருந்த 4 பசுமாடுகளை காணவில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்