பறவைகளை வேட்டையாடினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பறவைகளை வேட்டையாடினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை

Update: 2022-10-14 18:45 GMT

நாகை மாவட்டத்தில் பறவைகளை வேட்டையாடினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் ஆதிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பறவைகள் வேட்டையாடப்படுகிறது

நாகை மாவட்டத்தில் மடையான், கொக்கு, குயில், மயில், நாரை வகைகள், உள்ளான், கவுதாரி உள்ளிட்ட பறவை வகைகள், வன உயிரினங்களான உடும்பு, முயல், மான் உள்ளிட்டவைகளை பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் தடையை மீறி பறவைகள், வன உயிரினங்களை வேட்டையாடுகின்றனர். இது குற்றமாகும்.

இதேபோல் வனத்துறைக்கு சொந்தமான மரங்களையும் வெட்டக்கூடாது. இதை மீறி செயல்படுவோர்கள் மீது 1972 இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறது.

மேலும் பறவைகள், வன உயிரினங்கள் பிடிப்பது தெரியவந்தால் 8754653202, 8610453384 என்ற செல்போன் எண்களின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதுபோல் தகவல் தெரிவிப்பவர்களின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு, ரகசியம் காக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்